பால்மரக் காட்டினிலே ...


 

To order an ebook click here !

 

அகிலன்


சமூக நாவல்

விலை:150/-

தாகம் பதிப்பகம்

 புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145

இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.
 
copyright @2024 AkilanKannan
 
 
அச்சுப் பதிப்பு மின்னூல் பதிப்பு 


மலேசிய தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை , தோட்டக்காடுகளை ஊடுருவி சென்று அவர்களின் போராட்டங்களை சித்தரிக்கும் வலுவான நாவல் .
நாவலில் ...
'பொன் விளையும் பூமியான மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முதன் முதலில் காணச் செல்வோம்.
ரப்பர் தோட்டங்களை சில வெள்ளைக்கார முதலாளிகள் துண்டு போட்டு விற்று விட்டு கப்பலேற முயன்ற காலம் அது.
வாருங்கள் நாமும் கப்பலேறி கடல் கடந்து செல்வோம்,கரையை எட்டி, நகரங்களைக் கடந்து பால் மறக் காட்டுக்குள் நுழைவோம் ...' அகிலன் (1979)

Copyright © 2024

by AKILAN KANNAN

All rights reserved. No part of this BOOK / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission from Akilan Kannan c/o Tamilputhakalayam,chennai.

AKILAN KANNAN

 

TNAGAR CHENNAI 17

 OR EMAIL : tamilputhakalayam@gmail.com

இரண்டாவது உலகப் போர் முடிவை எட்டுவதற்கு சற்று முந்தைய காலம்.அமெரிக்க இங்கிலாந்து படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜப்பானிய படை மியான்மர் (பர்மா) ஊடாக மலேயாவை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த தருணம்; ஆங்கில முதலாளிகள், எதிர்காலத்துக்கும் உயிருக்கும் பயந்து தங்களின் வசமிருந்த ரப்பர் தோட்டங்களை கிடைத்த விலைக்கு துண்டுபோட்டு விற்றுவிட்டு தங்களின் நாட்டுக்குப் பயணமாகிக் கொண்டிருந்தனர்.

அதனால் , அதுவரை தோட்டங்களை நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் நிலையும் வாழ்வும் கேள்விக்குறியானது . ஒரு நாள் நோட்டீஸ்

மூலம் எண்ணற்ற தமிழர்கள் வேலை இழந்து தவிக்கின்ற அந்தப் புள்ளியிலிருந்து கதை தொடங்குகிறது …

பல பதிப்புகள் வெளி வந்துள்ள இந் நாவல் அகிலனின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்று.

வாசகரின் வசதிக்காக இந்த மின்னூல் பதிப்பு.

துல்லியமாக , பிழை இன்றி, வாசிக்க வசதியாய் பெரிய எழுத்தில்…

அகிலனின் இந் நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது தமிழ்ப்புத்தகாலயம்.

வாங்கிப் படித்துப் பயன்பெறப் போகும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

தமிழ்ப்புத்தகாலயம்


இந்த நாவலைப் பற்றி…வாசகர் பார்வையில்...

  • இந்நாவல் எழுதப்பட்ட பொழுது, மலேசியாவில் தமிழ் இலக்கியம் என்ற ஒன்று தனியே உருவாகியிருக்கவில்லை . தமிழ்நாட்டு இலக்கியங்களே வலம் வந்தன.படித்தவர்கள் மிகக் குறைவு,எழுதுபவர்கள் இல்லை என்னும் நிலைதான். இந்நாவலைப் படித்து, பார்த்து எழுதத் தொடங்கியவர் பலர். இது தமிழ் நாட்டுத் தமிழர்கள் மலேசியத் தமிழர்களை அறிந்து கொள்ள எழுதியது என்பார் அகிலன். ஆனால் , மலேசிய வாழ் தமிழர்களே,தங்கள் நாட்டின் தமிழ்க் குடிகளை அறிய இந்நாவல் பெரிதும் உதவியது என்பர்.

Dr. இரா. காமராசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்

  • இங்கு வசிக்கும் நாங்களே கண்டிராத வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறீர்கள். தாங்கள் இங்கு வந்தபோது, தங்களை விட்டகலாதிருந்த எங்களுக்கே தாங்கள் எப்படி இவ்வளவு செய்திகளைச் சேகரித்தீர்கள் என்று வியப்பு! உன்னதமான படைப்பு!

டாக்டர். இரா. தண்டாயுதம் , மலேசியப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்.

  • தோட்டப்புறங்களில் வாழும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை போராட்டங்களை சித்தரிக்கும் அருமையான நாவல். தாங்கள் இங்கு வருகை தந்த நினைவுகளை, இந்த இலக்கியப் படைப்பால் நிரந்தரமாக்கி விட்டீர்கள்!

ரே.கார்த்திகேசு, அறிவியல் துறை பல்கலைக்கழகம், பினாங்கு.

  • தோட்டக்காடுகளை ஊடுருவிச் சென்று, அந்த வாழ்க்கைக்கு ஒளிபாய்ச்சிப் புலப்படுத்துகிறீர்கள். அண்டையில் வாழும் தோட்டத் தொழிலாளர் வாழ்வின் அல்லல்களை இவ்வளவு காலமாக நாங்களே தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்ற எண்ணம் எங்களுக்கு.

நா. கோவிந்தசாமி எழுத்தாளர் சிங்கப்பூர்.

  • மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல புலரும் அந்த நல்ல வேளை நெருங்கிக் கொண்டுதான் வருகிறது என்ற நம்பிக்கை உணர்வைத் தூண்டிவிடும் அற்புதமான நாவல்.

இராம. கண்ணபிரான், எழுத்தாளர் சிங்கப்பூர்