இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.
அகிலன் / Akilan
சமூக நாவல் / social novel
விலை ரூ .260
Publications: Dhagam, chennai
ISBN: 81-89629-09-3
ஆசிரியர் அகிலனின் பொன்மலர் சமூக நாவல்
*1964 இல் கலைமகளில் தொடர்கதையாக வந்த
இந்த நாவல் நம் மனதை விட்டு அகல மறுக்கும் ஓர்
நாவல். பொன்மலர் -பொன்னாலான மலர் எப்படி
திடம் கொண்டு இருக்குமோ அப்படிப் பட்ட
மனோதிடமும் நுண்ணறிவையே முட்களாகவும்
ஆயுதமாகவும் கொண்டு தன்னையும்
காத்துகொண்டு , இந்தச் சமூக அவலங்களில்
இருந்து சாதாரண மக்களையும் காக்க முற்பட்ட ஒரு
பெண்ணே , கதையின் நாயகி டாக்டர் சங்கரி. இந்த
நாவல் சுவையாகவும் சிந்திக்கத் தூண்டும்
வகையிலும் இன்றைய சமூகத்தைப்
பிரதிபலிக்கிறது..இதுவே இந்த நாவலின்
தனித்துவம் .1960 இல் எழுதிய நாவல் என்றாலும் ,
இன்றும் இந்த நாவலைக் கையில் எடுத்தால் அதை
முழுமையாகப் படித்துவிட்டே கீழே வைக்கத்
தோன்றும் . அப்படி சுவாரஸ்யமான இருப்பதோடு ,
முள் தைப்பது போல் உண்மைகள் நம்மை
தைக்கத்தான் செய்யும். ஆசிரியர் அகிலனின்
எழுத்துக்கள் இன்றைய இளம் தலைமுறை
வாசகர்களையும் கவர்வது மட்டுமின்றி,
சிந்திக்கவும் தூண்டும் சக்தி படைத்தவை என்றே
சொல்லலாம். இத்தகைய இந்த நாவலை இன்றைய
இளம் வசகர்களுக்காக்காகவும், அகிலனின்
நெடுநாள் வாசகர்களின் வசதிக்காகவும் இந்தப்
புதிய பதிப்பு , அழகிய கட்டமைப்பில்
வெளிவந்துள்ளது . தமிழர் உள்ள இடமெல்லாம்
அகிலனின் இந்த மிகச் சிறந்த படைப்பு செல்ல
வேண்டும் எனும் ஆவலில் இந்தப் புத்தகத்தைபுது
வடிவில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி
கொள்கிறது தமிழ்ப்புத்தகாலயம். இதை வெளியிட
அனுமதி அளித்த திரு. அகிலன் கண்ணன்
அவர்களுக்கு எமது நன்றி . வாசிக்கப் போகும்
உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
தமிழ்ப்புத்தகாலயம் சென்னை
Copyright © 2022 by AKILAN KANNAN
All rights reserved. No part of this BOOK / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission from Akilan Kannan c/o Tamilputhakalayam,chennai.
AKILAN KANNAN
OR EMAIL : tamilputhakalayamThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.