
விடுதலைப் போராட்ட வீரர் கண.முத்தையா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய இந்திய தேசிய ராணுவத்தில் விடுதலைக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியுமான கண.முத்தையா சிவகங்கைமாவட்டம், மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் 1913- மே 24ல் பிறந்தவர்.

அடிப்படை கல்வியை இலங்கையில் படித்தார்.
தந்தை கண்ணப்பன் திடீர் மறைவால் மெட்ரிக் தேர்வுஎழுத இயலாது, பர்மா இலங்கை இந்தியா ஆகிய நாடுகளில் தந்தையின் வணிகத்தை மீட்டெடுத்தார்.இந்திய விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர் 1936-ல் வணிகத்திற்காக பர்மா சென்று, ‘தன வணிகன்’இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவர். பின்னர்1937-இல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார். பர்மாவின் ரங்கூன் நகரை அடுத்த கம்பைஎனும் ஊரில் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் செகன்ட் லேப்டனன்ட் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார்.

நேதாஜியைக் கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர் .பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, இராகுல் சாங்கிருத்தியாயனின் ‘பொதுவுடைமைதான் என்ன’ , ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என இரண்டு நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்தார்.பின் கொல்கத்தாவுக்கு திரும்பினார்.
1946-இல் தமிழ் புத்தகாலயத்தை நிறுவினார். நேதாஜியின் ‘புரட்சி’ என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
https://twitter.com/DHAGAM/status/1825089767790248226/video/1
https://www.panuval.com/tamil-puthahalayam/puratchi-10014130?page=4
மாவோ,கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களைத் தமிழில் பதிப்பித்து வெளியிட்டார்.

தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, ஜார்ஜ் குலியா, துர்கனேவ் மற்றும் சீனப் படைப்பாளி போன்ற உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும், அதே பொழுது நமது இந்தியப் பிற மொழிப் படைப்பாளிகள் - பிரேம்சந்த் , எம் .டி .வாசுதேவன் நாயர் போன்றோர் படைப்புக்களையும் நம் தமிழுக்கு நல்கினார் .புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் கண.முத்தையா.
https://www.facebook.com/knmuthaia/videos/840346636351730
அகிலன் , நா.பா ., ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் நூல்களைத் தமிழ் கூறும் நல் உலகமெங்கும் உள்ள வாசகர்களுக்குத் தம் பதிப்புக்கள் வழி கொண்டு சென்றார்
•சாமி சிதம்பரனார் , எஸ் .வையாபுரிப்பிள்ளை , கு.அழகிரிசாமி ,சுந்தர ராமசாமி , தொ .மு .சி .ரகுநாதன் , க.நா .சு., பி.ஜி . கருத்திருமன் , எஸ்.எஸ்.மாரிசாமி , சாத்தன்குளம் ராகவன், சாலை இளந்திரையன், குஞ்சன்பிள்ளை, இ.பா., ஹெப்சிபா யேசுதாசன் போன்றவர்களின் எழுத்துக்களைப் பதிப்பித்தார் .
•இலங்கை , மலேசிய , சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர் , அறிஞர்களின் நூல்களை அக்கறையோடு நம் நாட்டு வாசகர்களுக்கும் பதிப்பித்து வழங்கினார் .
•ஜீவா , பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் , எஸ்.ஆர்.கே , ஆர்.எச் நாதன் , பி.எஸ்.சர்மா , என்று ஒரு பக்கமும் , மறு பக்கம் , பெரியார் , காமராஜர் , அண்ணா , பக்தவத்சலம் போன்றோரிடமும் தோழமையும் நட்பும் கொண்டிருந்தார் .
•மூன்றாண்டுகள் தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைச் செயலர் , தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயற்குழு உறுப்பினர் ( ஓராண்டு ), பதிப்பாளர் சங்கத் தலைமை ( ஓராண்டு ) என்றும் பொறுப்பான பணியினையும் ஆற்றினார் .
• 12.11.1997 இல் மறைந்தார் .
தமிழ்ப்புத்தகாலயம் -தாகம் சிறுவர் நூல்

வீரச் சிறுவனும் வெள்ளைக் காக்கைகளும் / Veera Chiruvanum Velai Kaakaigalum: கருத்தான சிறுவர் கதைகள்: அகிலன்

தங்க நகரம் / Thanga Nagaram: கருத்தான சிறுவர் கதைகள் / அகிலன்
Children’s story book Kindle Edition / ASIN : B0D664SVPY அகிலன்

பழகத் தெரிந்து கொள்வோம் – 60 /-அகிலன் கண்ணன்
பட்டாம்பூச்சி – 20 /- (சிறுவர் கதைகள்)அகிலன் கண்ணன்
பச்சை மரம் ஒண்ணு – 45 /- க. அபிராமி
தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தின் நாவல் வெளியீடுகளின் விவரப் பட்டியல் இங்கே...
இந்த புதகங்களை அந்த அந்த தலைப்புகள் விசை அழுத்தி பெறலாம்.
click the titles to order books
படிக்க,பரிசளிக்க,பாதுகாக்க
எமது பதிப்புகளை தபாலில் பெற தனி நபர்கள் எளிதாக இனி எமது +919025679145 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.