click here for books

தமிழ்ப்புத்தகாலயம் தாகம்

TPM
24/5 கண.முத்தையாவின் பிறந்த நாள்

தமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் அமரர் கண.முத்தையா

விடுதலைப் போராட்ட வீரர் கண.முத்தையா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய இந்திய தேசிய ராணுவத்தில் விடுதலைக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியுமான கண.முத்தையா சிவகங்கைமாவட்டம், மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் 1913- மே 24ல் பிறந்தவர்.

அடிப்படை கல்வியை இலங்கையில் படித்தார்.

தந்தை கண்ணப்பன் திடீர் மறைவால் மெட்ரிக் தேர்வுஎழுத இயலாது, பர்மா இலங்கை இந்தியா ஆகிய நாடுகளில் தந்தையின் வணிகத்தை மீட்டெடுத்தார்.இந்திய விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர் 1936-ல் வணிகத்திற்காக பர்மா சென்று, ‘தன வணிகன்’இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவர். பின்னர்1937-இல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார். பர்மாவின் ரங்கூன் நகரை அடுத்த கம்பைஎனும் ஊரில் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் செகன்ட் லேப்டனன்ட் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார்.

நேதாஜியைக் கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர் .பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, இராகுல் சாங்கிருத்தியாயனின் ‘பொதுவுடைமைதான் என்ன’ , ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என இரண்டு நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்தார்.பின் கொல்கத்தாவுக்கு திரும்பினார்.

1946-இல் தமிழ் புத்தகாலயத்தை நிறுவினார். நேதாஜியின் ‘புரட்சி’ என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.

https://twitter.com/DHAGAM/status/1825089767790248226/video/1

மாவோ,கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களைத் தமிழில் பதிப்பித்து வெளியிட்டார்.

தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, ஜார்ஜ் குலியா, துர்கனேவ் மற்றும் சீனப் படைப்பாளி போன்ற உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும், அதே பொழுது நமது இந்தியப் பிற மொழிப் படைப்பாளிகள் - பிரேம்சந்த் , எம் .டி .வாசுதேவன் நாயர் போன்றோர் படைப்புக்களையும் நம் தமிழுக்கு நல்கினார் .புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் கண.முத்தையா.

https://www.facebook.com/knmuthaia/videos/840346636351730

https://tamilputhakalayam.wordpress.com/2013/10/31/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/embed/#?secret=94ACi18DRc#?secret=wOHzDXyBxi

அகிலன் , நா.பா ., ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் நூல்களைத் தமிழ் கூறும் நல் உலகமெங்கும் உள்ள வாசகர்களுக்குத் தம் பதிப்புக்கள் வழி கொண்டு சென்றார்

•சாமி சிதம்பரனார் , எஸ் .வையாபுரிப்பிள்ளை , கு.அழகிரிசாமி ,சுந்தர ராமசாமி , தொ .மு .சி .ரகுநாதன் , க.நா .சு., பி.ஜி . கருத்திருமன் , எஸ்.எஸ்.மாரிசாமி , சாத்தன்குளம் ராகவன், சாலை இளந்திரையன், குஞ்சன்பிள்ளை, இ.பா., ஹெப்சிபா யேசுதாசன் போன்றவர்களின் எழுத்துக்களைப் பதிப்பித்தார் .

•இலங்கை , மலேசிய , சிங்கப்பூர் வாழ் தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர் , அறிஞர்களின் நூல்களை அக்கறையோடு நம் நாட்டு வாசகர்களுக்கும் பதிப்பித்து வழங்கினார் .

•ஜீவா , பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் , எஸ்.ஆர்.கே , ஆர்.எச் நாதன் , பி.எஸ்.சர்மா , என்று ஒரு பக்கமும் , மறு பக்கம் , பெரியார் , காமராஜர் , அண்ணா , பக்தவத்சலம் போன்றோரிடமும் தோழமையும் நட்பும் கொண்டிருந்தார் .

•மூன்றாண்டுகள் தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைச் செயலர் , தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயற்குழு உறுப்பினர் ( ஓராண்டு ), பதிப்பாளர் சங்கத் தலைமை ( ஓராண்டு ) என்றும் பொறுப்பான பணியினையும் ஆற்றினார் .

• 12.11.1997 இல் மறைந்தார் .

தொழில்நுட்ப நூல்கள் 

விண்டோஸ்தான்  என்ன? -100 /-

மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /- 

ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் – 60 /- 

விளம்பர உலகம் -35 /-

சரித்திரம் ,  சட்டம்
வேங்கையின் மைந்தன்

மாணவர்களுக்கு

வாழ்கலை கட்டுரைகள்  Kindle Edition/ ASIN ‏ : ‎ B0D4YYCYD

    • கம்ப்யூட்டர்,தொலைத்தொடர்பு,இதழியல், விளம்பரத் தொழில்நுட்ப நூல்கள் 

    தலைவர்கள் சரிதம்

    கட்டுரைகள் கதைகள்

    நாவல்கள்

    சரித்திர நாவல்கள் 

    click the titles to order books

    சமூக நாவல்கள்

    படிக்க,பரிசளிக்க,பாதுகாக்க

    எமது பதிப்புகளை தபாலில்  பெற தனி நபர்கள் எளிதாக இனி எமது  +919025679145 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.

    Tamilputhakalayam : books / தமிழ்ப்புத்தகாலயம் : புத்தகங்கள்

    விலைப்பட்டியல் 2026

    வால்காவிலிருந்து கங்கை வரை- 500/-
    +150/-(postage)
    To order books call : 91-9025679145
    வெற்றித்திருநகர் 700/-
    +150/-(postage)
    To order books call : 91-9025679145
    சித்திரப்பாவை: 800/-
    +150/-(postage)
    To order books call : 91-9025679145

    எமது பதிப்புகளை தபாலில்  பெற தனி நபர்கள் எளிதாக இனி எமது  +919025679145 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.

    எமது புதகங்களை தபாலில் பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள gpay qr code ஐ உங்களின் மொபைல் gpay செயலியில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி , பெறலாம். (புத்தக விலை +தபால் செலவு) பணம் செலுத்திய பின் ஸ்க்ரீன் பதிவு எடுத்து +919025679145 எண்ணுக்கு உங்கள் முகவரி புத்தக பெயர், புத்தக பிரதிகளின் எண்ணிக்கை விவரங்களை , வாட்சாப் செய்யவும்.

    gpay qr code : kindly check upi id name : Tamilputhakalayam before sending money.