பால்மரக்காட்டினிலே ... / Paal Marak Kaattinile:
அகிலன் சமூக நாவல் : Akilan Social Novel:
மலேசியத் தமிழ் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய முதல் தமிழ் நாவல்
இரண்டாவது உலகப் போர் முடிவை எட்டுவதற்கு சற்று முந்தைய காலம்.அமெரிக்க இங்கிலாந்து படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜப்பானிய படை மியான்மர் (பர்மா) ஊடாக மலேயாவை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த தருணம்; ஆங்கில முதலாளிகள், எதிர்காலத்துக்கும் உயிருக்கும் பயந்து தங்களின் வசமிருந்த ரப்பர் தோட்டங்களை கிடைத்த விலைக்கு துண்டுபோட்டு விற்றுவிட்டு தங்களின் நாட்டுக்குப் பயணமாகிக் கொண்டிருந்தனர்.
அதனால் , அதுவரை தோட்டங்களை நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் நிலையும் வாழ்வும் கேள்விக்குறியானது . ஒரு நாள் நோட்டீஸ்
மூலம் எண்ணற்ற தமிழர்கள் வேலை இழந்து தவிக்கின்ற அந்தப் புள்ளியிலிருந்து கதை தொடங்குகிறது …
பல பதிப்புகள் வெளி வந்துள்ள இந் நாவல் அகிலனின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்று.
வாசகரின் வசதிக்காக இந்த மின்னூல் பதிப்பு.
துல்லியமாக , பிழை இன்றி, வாசிக்க வசதியாய் பெரிய எழுத்தில்…
அகிலனின் இந் நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது தமிழ்ப்புத்தகாலயம்.
வாங்கிப் படித்துப் பயன்பெறப் போகும் உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
தமிழ்ப்புத்தகாலயம்
இந்த நாவலைப் பற்றி…வாசகர் பார்வையில்...
இந்நாவல் எழுதப்பட்ட பொழுது, மலேசியாவில் தமிழ் இலக்கியம் என்ற ஒன்று தனியே உருவாகியிருக்கவில்லை . தமிழ்நாட்டு இலக்கியங்களே வலம் வந்தன.படித்தவர்கள் மிகக் குறைவு,எழுதுபவர்கள் இல்லை என்னும் நிலைதான். இந்நாவலைப் படித்து, பார்த்து எழுதத் தொடங்கியவர் பலர். இது தமிழ் நாட்டுத் தமிழர்கள் மலேசியத் தமிழர்களை அறிந்து கொள்ள எழுதியது என்பார் அகிலன். ஆனால் , மலேசிய வாழ் தமிழர்களே,தங்கள் நாட்டின் தமிழ்க் குடிகளை அறிய இந்நாவல் பெரிதும் உதவியது என்பர்.
Dr. இரா. காமராசு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்
இங்கு வசிக்கும் நாங்களே கண்டிராத வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகிறீர்கள். தாங்கள் இங்கு வந்தபோது, தங்களை விட்டகலாதிருந்த எங்களுக்கே தாங்கள் எப்படி இவ்வளவு செய்திகளைச் சேகரித்தீர்கள் என்று வியப்பு! உன்னதமான படைப்பு!
டாக்டர். இரா. தண்டாயுதம் , மலேசியப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்.
தோட்டப்புறங்களில் வாழும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை போராட்டங்களை சித்தரிக்கும் அருமையான நாவல். தாங்கள் இங்கு வருகை தந்த நினைவுகளை, இந்த இலக்கியப் படைப்பால் நிரந்தரமாக்கி விட்டீர்கள்!
ரே.கார்த்திகேசு, அறிவியல் துறை பல்கலைக்கழகம், பினாங்கு.
தோட்டக்காடுகளை ஊடுருவிச் சென்று, அந்த வாழ்க்கைக்கு ஒளிபாய்ச்சிப் புலப்படுத்துகிறீர்கள். அண்டையில் வாழும் தோட்டத் தொழிலாளர் வாழ்வின் அல்லல்களை இவ்வளவு காலமாக நாங்களே தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்ற எண்ணம் எங்களுக்கு.
நா. கோவிந்தசாமி எழுத்தாளர் சிங்கப்பூர்.
மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல புலரும் அந்த நல்ல வேளை நெருங்கிக் கொண்டுதான் வருகிறது என்ற நம்பிக்கை உணர்வைத் தூண்டிவிடும் அற்புதமான நாவல்.
இராம. கண்ணபிரான், எழுத்தாளர் சிங்கப்பூர்
PURCHES NOW