

The story of our Publishing House “Tamilputhakalayam”
Tamilputhakalayam -Dhagam is a publishing house that was established at Chennai, India since 1946 by freedom fighter and author Late.Shir.Kana.Muthaiya.
mr.Muthaiya belonged to a well established Tamil business family from the village Madagupatti.
He was educated in Sri Lanka,Singapore and later after his father’s sudden demise he was sent to Burma at a very young age to continue his family business.
It was then that Mr,Muthaya got involved in
India’s freedom struggle and took interest in literature and art as well.
Our founder was a close associate of Netaji subash chandra bose and was working as his second lieutenant in his Indian national Army in Burma.
He later returned to India as a war prisoner and was released in kolkatta. During his prison days he was introduced to the writings of the most talented Indian author Rahul sankrithyayan’s works, had letter contacts with him. Muthaya translated two of the works of Rahulji “valga to ganaga” and “what is communism?” from Hindi to Tamil ( A British officer in prison took lot of effort to help him in his writing venture) . The first book he published was Netaji’s speech “Puratchi”. These books have become the most acclaimed literary works of modern non fiction Tamil literature..
From then mr.Muthaya introduced a great many books to the Tamil society and published works of many talented authors. He mainly published books on serious literature,society,politics ,feminism,grammar and history. He also concentrated on translations. Though he was a Gandhian by nature, he also published many communist books.
He was a man of great values and he never compromised his publishing for any pressure.
Mr.Muthaiya was involved in establishing a healthy,intellectual Tamil society. Apart from literary field, he had close contacts with great political leaders like shri.nehru, Shri.Baktavatchalam, shri.Kamaraj, shri.C.Subramaniyam.
Our socially committed founder was quiet persistent on publishing very good literary works that would result in the development of society. Even though he encouraged globalization, he would never publish anything that was against his national interest.
And he practiced gandian way of life till his last breath. He led a simple and humble life.He vehemently opposed caste system, religious differences, language barriers, gender bias, corruption and anti social activities.
Mr.Muthaya’s elder daughter Mrs.Meenakshi Kannan, a chemistry graduate follows his path today and runs the publishing house along with her husband Mr.Akilan Kannan ( the elder son of Eminent Tamil author Akilan) and their two daughters.
-------------
தமிழ் மக்களின் அறிவுப் பசி தீர்க்கும் எமது 67 ஆண்டு கால இலட்சியப் பயணத்தில் தடம் பதித்து உங்கள் மனதில் இடம்பிடிக்க வாய்ப்பு தரும் வாசக நெஞ்சங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றி ! எமது நிறுவனர் திரு. கண,முத்தையா வால்காவிலிருந்து கங்கை வரை, பொதுவுடைமை தான் என்ன ? போன்ற புத்தகங்களை தாமே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
வால்காவிலிருந்து கங்கை வரை, பொதுவுடைமை தான் என்ன ? போன்ற புத்தகங்களை தாமே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார்.
படைப்பாளர் , பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர் ,நூல் வெளியீட்டாளர் எனப் பல் வேறு துறைகளிலும் ஒளிவிட்டுத் துலங்கியவர் கண.முத்தையா அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றியுழைத்த தியாகியாகவும் திகழ்ந்தவர்.
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய சுபாஸ் சந்திர போஜின் இராணுவத்தில் முக்கிய ஸ்தானம் வகித்தவர். நாட்டுப்பற்றோடு விடுதலைக்காக உழைத்ததுடன் நூல் வெளியீடு படைப்பிலக்கியத்துறையிலும் தடம்பதித்து இப் பெரியார் நவம்பர் மாதம் 12 தேதி இயற்கை எய்தினார்.
சிவகங்கையில் மதகுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 1913ஆம் ஆண்டு கண .முத்தையா பிறந்தார். 1930ஆம் ஆண்டு பர்மா சென்றடைந்தார். அங்கே நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நாட்டுப் பற்றாலும் கம்பீரமான வீரச் சொற் பொழிவுகளாலும் நன்கு கவரப்பட்டார் . விடுதலைப் போராட்டத்தில் தானும் குதித்தார். நேதாஜி போசைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையா அவர்களும் அடங்குவர்.
1946 இல் பர்மாவைவிட்டு சென்னை திரும்பிய இப்பெரியார் ‘ தமிழ்ப்புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார், அதன் முதல் பதிப்பாக “நேதாஜியின் புரட்சி” என்ற நூலை வெளியிட்டார் . “வால்காவிலிருந்து கங்கை வரை ” என்ற சாங்கிருத்யாயனின் நூலையும் ” பொதுவுடமை என்றால் என்ன?” என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
எழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் கூட தமிழகத்துக்கு மாறான கருத்துக்களைக் கூறும் எந்தப் படைப்பையும் தூக்கி எரிந்து விடுவார், பிரசுரிக்க உடன்படமாட்டார். பர்மாவில் ” தன வணிகன்” என்றொரு இதழ் முன்னர் வெளியாகியது. அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய கண.முத்தையா அவர்கள் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்.
தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு பதிப்பாளார் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற பல அமைப்புகளில் இருந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார்.
பிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன் இவரது மகளை மணந்த முறையில் அகிலனுடைய சம்மந்தியானார்.
அகிலன்,ராஜம்கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, ஆகிய படைப்பாளிகளின் எழுத்துக்களையும், புதுமைப்பித்தன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன்,கு.அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை பதிப்புச் செய்து இலக்கிய உலகுக்கு உதவினார்.
இவர் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை ஒழுங்காக கணக்கு வைத்து , எழுத்தாளரிடம் கையளிப்பதில் மிகவும் நறுக்காக இருந்து தொழில் பட்டமையை மறக்க முடியாது.
இவர் பதித்த நூல்கள் பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைப் பரிசு, இலக்கிய சிந்தனைப்பரிசு, பாரதீய பாசா பரிசத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு அமைப்புகளிலும் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – பத்மா சோமகாந்தன் (வீரகேசரி– 1998) ]