Political books: அரசியல் புத்தகங்கள்
- வால்காவிலிருந்து கங்கை வரை -500/– ராகுல சாங்கிருத்யாயன் -தமிழில் :கண.முத்தையா : வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம் எமது நிறுவனர் க.ண.முத்தையா தமிழ் மக்களின் அறிவுச் சொத்து … கி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக. 36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது. இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என கதை வடிவிலான சரித்திர உண்மைகள். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
- பொதுவுடைமை தான் என்ன?– 60 /-
- எங்கேபோகிறோம் ? அகிலன்-175/- ( ராஜா அண்ணாமலை பரிசு ):நாம் எங்கே போகிறோம் நாடு எங்கே போகிறது ?. நாடு விடுதலை பெற்ற பின் சமுதாய மற்றும் அரசியல் சூழல் எப்படி இந்த சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் அகிலன் . நூலிலிருந்து "எச்சரிக்கையோடு இந்நாவலிடம் நெருங்குங்கள் ! 'எரிமலை'யிலிருந்து வெடித்து ,இன்னும் தன் சத்திய ஆவேச வெப்பம் தணியாத நிலையில் இருக்கும் ஓர் அக்கினிக்குஞ்சு இது. இன்றோ ,நாளையோ,அடுத்த தலைமுறையிலோ , உருவாகும் செயல் வீரன் ஒருவன் கையில் இது கிடைக்காத என்ன ?" - அகிலன்
- நாடு,நாம் தலைவர்கள் -அகிலன் -100 /- : நாடு நாம் தலைவர்கள் அடிமை இந்தியாவில் பிறந்து , தம் இளமைப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு , சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து , மறைந்த எழுத்தாளர் அகிலன் தான் வாழ்ந்த காலத்திய அரசியல் , கலை இலக்கியப் போக்குகளைக் கண்டு உணர்ந்து , உள்வாங்கிப் பிரதிபலித்ததன் தொகுப்பு இது . இருபதாம் நூற்றாண்டுக் காலத்தின் அரசியல் தலைவர்கள் , கலை இலக்கியப் படைப்பாளிகள் பற்றி அகிலனின் ஆழ்ந்த பார்வைகள் இதில் . காந்தி , நேரு , இந்திரா காந்தி , காமராஜர் , எம். பக்தவத்சலம் , கலைஞர் இவர்களைப் பற்றியும் இவர்களது பங்களிப்பு பற்றியும் சுதந்திரச் சிந்தனையாளராகத் தம் கருத்துக்களைக் கூர்மையாகக் கூறியுள்ளார் . வள்ளுவர் , பாரதி , வால்ட்டேர் , ஷோலகாவ் , கல்கி , அ.சீ.ரா , மு. வ இவர்களும் இதிலே உள்ளார்கள் . கலை உலகம் பற்றியும் , தனது உள்நாட்டு அயலகப் பயணங்கள் பற்றியும் தீவிரமான சுவையான கட்டுரைகளும் கூட ! ஒரு நூற்றாண்டில் நாம் செய்ததையும் , செய்யத் தவறியதையும் , செய்ய வேண்டியதையும் கண்டு , கணக்கிட்டு , செய்யத் தூண்டும் ஆழமான வழிகாட்டும் நூலிது .
- புரட்சி– நேதாஜி – 12/- 1946ல் பதிப்பிக்கப்பெற்ற தமிழ்ப்புதகாலயத்தின் முதல் புத்தகம் இது.
தமிழ்ப்புத்தகாலய நிறுவனர் கண.முத்தையா இந்திய தேசிய ராணுவத்தில்(INA) ல் நேதாஜியின் கீழ் பணியாற்றியவர் .பர்மாவில் நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.
நேதாஜியும் அவரது இராணுவத்தினரும் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு பாசிச சக்திகளுக்குத் துணையாகப் போரிட்டார்களென்று கூறுகிறவர்கள், யுத்தகளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கு நேதாஜி இட்ட கட்டளையான இச்சிறு நூலிலிருந்து அவரது உயர்ந்த இலட்சியத்தையும் சிறந்த திட்டங்களையும் நன்கு புரிந்துகொள்ளலாம்.
நூலில் நேத்தாஜி…
“மனிதன் எப்பொழுது தோல்வி அடைகிறான் தெரியுமா? தனது தோல்வியைத் தானே ஒப்புக்கொள்ளும் பொழுது தான் .”
” இங்கலீஷ்கார்களின் ஸ்தானங்களை எல்லாம் இந்தியர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம் . அதன் பின்னரும் அதே தரித்திரமும் , அதே வேலையில்லாத் திண்டாட்டமும், அதே தொத்து நோய்களும் , அதே மரண விகிதமும் நாட்டைப்பற்றி அலைக்கழிப்பதோடு ஏழைகளின் வயிறு வாடிப் பொதுமக்கள் போதிய கல்வி கற்க வசதியற்றிருப்பார்களேயானால் நமது வேலை உபயோகமற்றதாகிவிடும். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்து நிற்கும் வரை இக்கொடுமைகள் ஒழியாதென்பது நமக்குத்தெரியும். அதனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சகலவித காரியங்களையும் நமது நிர்வாகத்தின் கீழ் கொணர்ந்து , ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆகாரமும், உடையும், கல்வியும் கிடைக்கக்கூடிய புதிய ஒழுங்கைச் சிருஷ்டிக்க விரும்புகிறோம். “
இந்தியச் சுதந்திரப் போராட்ட வழிகளை இன்றைய இந்தியாவின் நிலையில் ஒரு மீள்பார்வை பார்க்கத் தூண்டும் நூலிது. - பகத் சிங்கும்புரட்சித்தோழர்களும்-100/-
- இந்தியவும் இந்து மதமும்-35/-
- தெலுங்கானா போராட்டம்-30/-
- அமெரிக்காவிலே-45/-
- எது நாகரிகம்?-30/-
தூக்குமேடைக்குறிப்பு-ஜூலிஸ் பூசிக் -75/- - கலையும் இலக்கியமும்-மா.சே.துங் -50/- “கலை இலக்கிய பிரச்சினைகள் ” என்ற நூலின் தமிழ் வடிவத்தைத் தமிழ்ப்புத்தகாலயம் “கலையும் இலக்கியமும் ” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது . அதிலிருந்து ஒரு பதச் சோறு:-
“…. ஜனங்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு யதார்த்தத்தை பார்க்க மறுத்துவிட்டு , தந்த கோபுரத்திற்குள்ளே தாளிட்டு உட்கார்ந்துகொண்டு, இம்மாதிரியான விசேஷ சேவையை அவர்கள் செய்ய முயலக்கூடாது. அல்லது ஜீவனும் , சாரமும் இல்லாத சக்கைகளைக் குவிக்கவும் கூடாது.
…ஜீவகளை ததும்பும் இலக்கியத்திற்கும் கலைக்கும் அள்ள அள்ளக் குறையாத விஷயக் குவியலைக் கொண்டுள்ள பொக்கிஷமாக விளங்குவது மக்களின் வாழ்க்கை ஒன்றுதான். அதுதான் பொக்கிஷமேயன்றி, வேறு மூலப்பொருள் உள்ள சுரங்கம் எதுவும் இருக்க முடியாது.”
கலையும் இலக்கியமும் – - ரஷ்யபுரட்சியின் வரலாறு -22/-
- யுத்தம் வேண்டாம்-25/-
- லெனினுடன் சில நாட்கள்-24/-